Pages

Friday, January 24, 2014

தமிழ் வழியில் பி.எட். படித்து முடித்தவர்களுக்கு அதற்கான சான்றிதழை ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இதற்காக ஆசிரியர்களிடம் ரூ.150 கட்டணம் பெறப்படுகிறது.

தமிழ் வழியில் பி.எட். படித்து முடித்தவர்களுக்கு அதற்கான சான்றிதழை ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இதற்காக ஆசிரியர்களிடம் ரூ.150 கட்டணம் பெறப்படுகிறது.

தமிழ் வழியில் படித்தவர் களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப் படுகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர் நியமனங்களுக்கும் இந்த இடஒதுக்கீடு பொருந்தும். ஆசிரியர் தேர்வு
வாரியம் நடத்திய தகுதித்தேர்வின் முடிவு அண்மையில் வெளியிடப்பட்டது.

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின்போது, தமிழ் வழியில் படித்திருந்தால் அதற்கான சான்று உள்பட கல்விச் சான்றிதழ்களையும் சாதிச் சான்றிதழையும் காட்ட வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு தமிழ் வழியில் பி.எட். படித்ததற்கான சான்றிதழை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இந்தச் சான்றிதழ் பெறுவதற்கு ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும்போது, கோரிக்கை கடிதம், ஆசிரியர் தேர்வு வாரிய அழைப்புக் கடிதம், பதிவாளர் பெயரில் எடுக்கப்பட்ட ரூ.150-க்கான டிமாண்ட் டிராப்ட், பட்டப் படிப்பு அல்லது முதுகலை படிப்பு சான்றிதழ், தமிழ் வழியில் பி.எட். படித்ததற்கு கல்லூரி முதல்வர் வழங்கிய சான்று அல்லது தமிழ் வழியில் பி.எட். படித்த விவரம் குறிப்பிடப்பட்ட மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) ஆகியவற்றை கொண்டு வரவேண்டும் என ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பி.ஏ.ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தமிழ்ப் பாடத்தில் இளங்கலை, முதுகலை படித்தவர்களும், அதேபோல் ஆங்கில இலக்கிய இளநிலை, முதுகலை பட்ட தாரிகளும் தமிழ் வழியில் பி.எட். படித்ததற்கான சான்றிதழ் வாங்கத் தேவையில்லை என்றும் ராஜேந்திரன் கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.