Pages

Tuesday, December 31, 2013

பதவி உயர்வு வழங்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

"தொடக்கக் கல்வியில் பணி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்" என கோரிக்கை எழுந்துள்ளது.


தமிழகத்தில், தொடக்கக் கல்வித்துறையில் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 2004-05ம் ஆண்டு முடிய இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில், ஐந்தாம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது எனவும், ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளுக்கு அந்தந்த பாட பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பது எனவும் அரசு முடிவெடுத்தது.

அதன்படி, தொடக்கக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் நடுநிலைப்பள்ளிகளில் 2005ல் இருந்து 26,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு மாநில முன்னுரிமை அடிப்படையில் 50 சதவீதம் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.மேலும், பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் மாவட்டக்கல்வி அலுவலர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தொடக்கக்கல்வித்துறை செயல்பட்டாலும், அதை தனி யூனிட்டாகவே கருதி தனி நிர்வாகம் நடந்து வருகிறது. இதனால், தொடக்கக்கல்வித்துறையில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு என்பது கானல் நீராக உள்ளது.

முதுகலை ஆசிரியர் நியமனத்தில் தங்களுக்கும் பதவி உயர்வு வாய்ப்பு வழங்க வேண்டும் என தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: "ஒரே சமயத்தில், டி.ஆர்.பி., தேர்வெழுதி பணி நியமனம் பெற்ற நிலையில் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். சில ஆண்டுகளில் அவர்கள் தலைமை ஆசிரியர்களாகவும் மாவட்டக்கல்வி அலுவலராகவும் மாற வாய்ப்பு உள்ளது.

ஆனால், தொடக்கக்கல்வித்துறையில் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், கடைசி வரை பட்டதாரி ஆசிரியர்களாவே இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதை மாற்றி நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.

4 comments:

  1. very good suggestion sir , please consider .

    ReplyDelete
  2. பள்ளிகல்வித்துறையைப்பொறுத்த வரையில் அறிவியல் பாடத்தை தவிர வேறு எந்த பாடத்தை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு என்பது கானல் நீராகவே உள்ளது.தற்போது முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் நியமன ஆண்டு.கணிதம் 2002.ஆங்கிலம் 2002.தமிழ் 1998 வரலாறு 1998. இவ்வாறு இருக்கையில் 2004 ற்கு பிறகு பணி நியமனம் பெற்ற தொடக்கக்கல்வி துறை பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?.
    என்னை பொறுத்த வரையில் பள்ளிகல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வி துறையை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களை ஒருங்கினைத்து மாநில சீனியாரிட்டி அடிப்படையில் நடுநிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர், உயர்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர் போன்ற பதவிகளை விருப்பத்தின் அடிப்படையில் பதவி உயர்வாக அளிக்கலாம்.
    மேலும் தொடக்கக்கல்வி துறை பட்டதாரி ஆசிரியர்கள் கூலுக்கும் ஆசை(பள்ளிகல்வித்துறையைச்சார்ந்த பதவி உயர்வுகள் பணியில் சேர்ந்த நாளின் அடிப்படையில்), மீசைக்கும் ஆசை(தொடக்ககல்வித்துறை பதவி உயர்வுகள் ஒன்றிய சீனியாரிட்டி அடிப்படையில்) என்பதை விட்டு விட்டு தொடக்கக்கல்வி துறையில் உள்ள ஏற்ற தாழ்வுகளை நீக்க போறாட வேண்டும்.அதாவது தொடக்கக்கல்வி துறையில் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு, நடுநிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, மற்றும் உதவி தொடக்க அலுவலர் பதவி உயர்வு போன்றவற்றை மாநில் சீனீயாரிட்டி நியமிக்க போராட வேண்டும்.

    ReplyDelete
  3. jayachandran cuddaloreThursday, January 02, 2014

    I am recruited by TRB Exam 2007 as BT ASST in middle school.Ranked below(waiting list) are posted as BRTE . Now they are promoted PG ASST. Why this variation? Can Higer authorities consider? Jayachandran cuddalore

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.