Pages

Thursday, November 28, 2013

"பெண் கல்வியால் தலைமுறையே வளர்ச்சி அடையும்"

"ஒரு வீட்டில் ஆண் அதிகமாக படித்தால், அந்த குடும்பம் மட்டுமே, வளர்ச்சி அடையும்; ஆனால்,அதே வீட்டில் பெண் அதிகம் படித்தால், அந்த தலைமுறையே வளர்ச்சி பெறும்,&'&' என, கல்வியாளர் ரமேஷ் பிரபா பேசினார்.


"ஜெயித்துக் காட்டுவோம்" நிகழ்ச்சியில், ரமேஷ் பிரபா பேசியதாவது: எஸ்.எஸ்.எல்.சி., படித்து, பொறியியல் சேர விரும்பும் மாணவர்கள், வீட்டின் வறுமை காரணமாக, படிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். பாலிடெக்னிக்கில் சேர்ந்து விடுங்கள்; மூன்றாண்டுகளுக்குப் பின், "வீட்டின் பொருளாதாரச் சூழல், சரியாகி விட்டது, ஆனால், இப்போது பொறியியல் படிப்பதற்கு காலம் கடந்து விட்டது" என, கவலைப்பட வேண்டாம். பாலிடெக்னிக் முடித்து, நேராக பொறியியலில், இரண்டாம் ஆண்டு படிக்கலாம்.

பெண்கள், நிறைய படித்து, உயர்வடைய வேண்டும். பெண்கள் எந்த நாட்டில், அதிகளவில் கல்வி பெறுகின்றனரோ, அந்நாடு எளிதில் வளர்ச்சி அடையும். ஒரு வீட்டில் ஆண் அதிகமாக படித்தால், ஒரு குடும்பம் மட்டுமே, வளர்ச்சி அடையும்; ஆனால், அதே வீட்டில் பெண், படித்தால், அந்த தலைமுறையே வளர்ச்சி பெறும். பெரும்பாலும், நமது மாணவர்கள் செய்யும் பெரிய தவறு, கடந்த ஆண்டுகளில் வெளிவந்த கேள்வித் தாள்களை வைத்துக் கொண்டு, குறிப்பிட்ட கேள்விகள் மட்டுமே வரும்; மற்றவை வராது என, நினைத்துக் கொள்கின்றனர்.

இது தவறு; கேள்வித்தாள்களை வைத்துக் கொண்டு, ஜாதகம் கணிக்காதீர்கள். அவ்வாறு, எதிர்பார்த்த கேள்விகள் வராத போது, மனம் சோர்வடையும். எனவே, இது தான் வரும்; இது வராது என, நினைக்காதீர்கள் அதே போல், தேர்வு அறைக்கு செல்லும் போது, துணுக்குகளை கொண்டு செல்லாதீர்கள. குறுக்கு வழியில் முன்னேற வேண்டும் என, நினைக்காதீர்கள். தேர்வில், வெற்றி, தோல்வி என்பது சகஜம். தோல்வி ஏற்படும் போது, விபரீதமான முடிவுகளை எடுக்காதீர்கள். சோதனைகளை, சாதனைகளாக்க பழகுங்கள். இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.