கோவை ஆர்டிஓ., அலுவலகத்தில் மாடர்ன் உடைக்கு தடை: மீறுவோர்க்கு லைசென்ஸ் இல்லை கோவை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு வருவோர், மாடர்ன் உடைகளை அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தினசரி ஏராளமானோர் ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்கின்றனர். அவ்வாறு வருவோரில் சிலர் மாடர்ன் டிரஸ் என்ற பெயரில் முகம் சுழிக்கும் வகையிலான உடைகளை அணிந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது
.இதனால், விரும்பத்தகாத பிரச்னைகளும் அங்கு ஏற்படுகின்றனவாம். எனவே, ஓட்டுனர் உரிமத்துக்காக வரும் ஆண்கள் சட்டை அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, பெண்கள் சுரிதார் அல்லது சேலை அணிந்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.டீ -சர்ட் போன்ற மாடர்ன் உடைகளை அணிந்து வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விண்ணப்பதாரர்கள் பின்பற்ற வேண்டும் என போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்," சிலர் அணிந்து வரும் உடை ஆபாசமாக இருக்கிறது. சில பெண்கள் டீ சர்ட் அணிந்து வாகனத்தை இயக்கிக் காண்பிக்கும்போது அதனை சிலர் வீடியோ எடுக்கின்றனர்.இதனால், தேவையில்லாத பிரச்னைகள் எழுகின்றன. இதனை தவிர்க்கவே இந்த நடைமுறையை பின்பற்ற கேட்டுக் கொள்கிறோம். அரசு அலுவலகங்களுக்கு வருவோர் நாகரீகமாக உடை அணிந்து வர வேண்டும்.இந்த விதி ஏற்கனவே அமலில் உள்ளது. இருப்பினும், இதனை கடுமையாக்கியுள்ளோம். இந்த உத்தரவை மீறி வருவோர்க்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படாது என்று கூறினார்.கோவை வட்டாரப் போக்குவரத்தின் இந்த உத்தரவுக்கு பொதுமக்களிடமிருந்து கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.