Pages

Monday, November 18, 2013

தகுதித் தேர்வு குறித்து ஆசிரியர்கள் தீர்மானம்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழகக் கூட்டம் மாவட்ட தலைவர் நாகசுப்ரமணியம் தலைமையில் நடந்தது. பொருளாளர் சூசைஅந்தோணிராஜ் முன்னிலை வகித்தார். செயலாளர் முருகன் வரவேற்றார். நிர்வாகிகள் ஸ்ரீகுமார், முகம்மதுரபீக், சார்லஸ் இம்மானுவேல், அபுதாகிர் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 15.11.2011க்குப் பின், டி.இ.டி., தேர்ச்சி பெறாமல், பணிநியமனம் பெற்ற உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை "பணிநீக்கம்' செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 23.8.2010க்கு முன் சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டு, ஆசிரியர்கள் நியமனம் பெற்றனர். அவர்களுக்கு தகுதித் தேர்வில் விலக்கு அளிக்கலாம் என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பையொட்டி, அவர்களிடம் விண்ணப்பம் பெற்று, அச்சான்றிதழை வழங்க வேண்டும், எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.