Pages

Friday, November 29, 2013

தீ தடுப்பு மற்றும் மனோதத்துவம் பற்றிய விழிப்புணர்வு

Displaying IMG_2378.JPG
Displaying IMG_2345.JPG

தேவகோட்டை ஸ்ரீ அண்ணாமலையார் கல்வி மற்றும் சேவை அறக்கட்டளை சார்பில் சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு மற்றும் மனோதத்துவம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம், அனைவருக்கும் கல்வி இயக்கம் மேற்பார்வையாளர் பீட்டர் லெமாயு முன்னிலை வகித்தனர். ஆசிரியர் செல்வம் வரவேற்றார். உதவி தொடக்ககல்வி அலுவலர் பால்ராஜ் விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். தமிழ்நாடு தீயணைப்பு நிலைய அதிகாரி இளங்கோ மற்றும் அவரது குழுவினர் மாணவ மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும்  தீ தடுப்பு குறித்து அறிவுரைகள் வழங்கி, செயல்முறை விளக்கம் செய்து
ஒவோவோருவரும் தீ பற்றும் ஆபத்து காலங்களில் எப்படி தீயை  தடுப்பது, உயிர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து விளக்கினார்கள். மனோதத்துவ நிபுணர் முனைவர் சந்தியாகு மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கான காரணங்கள் என்ன?  அதை எப்படி சரிசெய்வது என்பது குறித்து விளக்கினார்கள். மன அழுத்தம்  வரும் போது பெற்றோரிடமும், ஆசிரியரிடமும் மனம்விட்டு பேசுங்கள் என்று அறிவுரைகள் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் போஸ், அனைவருக்கும் கல்வி இயக்க பயிற்றுநர் ராஜசேகரன், பேராசிரியர் ஜானகிராமன், லயன் ஹரிஹரன்,ஆசிரியர்-ஆசிரியைகள்,மாணவ - மாணவிகள்,பெற்றோர்கள்,பொதுமக்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.

Displaying IMG_2403.JPG

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.