Pages

Wednesday, November 27, 2013

அரசு மேல்நிலைப்பள்ளியில் ஊழியரின்றி பணிகள் தேக்கம்

பாகனேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளர் உட்பட 5 பணியிடங்கள் காலியாக இருப்பதால் பணிகள் தேக்கமடைந்துள்ளன.

இங்கு, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இளநிலை உதவியாளர், காவலாளி, பராமரிப்பாளர் உட்பட அலுவலக பணிக்காக 5 பேர்கள் வரை இருந்தனர். இவர்களை படிப்படியாக மாறுதல் செய்துவிட்டனர். இதனால், ஏற்பட்ட காலியிடங்களுக்கு ஊழியர்களை நியமிக்கவில்லை. இதனால், பள்ளியின் அலுவலக பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. த

லைமை ஆசிரியரே அலுவலக பணிகள் அனைத்தையும் பார்க்கவேண்டிய நிலை உள்ளது. காவலாளி இன்றி பள்ளி வளாகத்தில் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. குடிமகன்கள் உள்ளே புகுந்து மதுபாட்டில்களை உடைத்து செல்கின்றனர். பள்ளி வரும் மாணவர்கள் இவற்றை சுத்தம் செய்த பின்னரே வகுப்பிற்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளிக்கு தேவையான ஊழியர்களை நியமிக்கவேண்டும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.