"டி.என்.பி.எஸ்.பி. குரூப் 2 தேர்வில் ஆயிரம் பேருக்கு மேல், எழுதும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்" என, கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்தார்.
தேர்வு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பேசியதாவது:
"டி.என்.பி.எஸ்.பி. குரூப் 2 தேர்வு டிச.,1ல் நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 38 மையங்களில் 10,609 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதில், திண்டுக்கலில் 24 மையங்களில் 8,500 பேரும், பழநியில் 14 மையங்களில் 2,109 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வுகளை கண்காணிக்க 60 முதன்மை கண்காணிப்பாளர்கள், 531 கண்காணிப்பாளர்கள், 12 நடமாடும் குழுக்கள், 40 வீடியோகிராபர்கள், 5 பறக்கும் படையினர் என, மொத்தம் 648 பேர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஆயிரம் பேருக்கு மேல், தேர்வு எழுதும் மையங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. தேர்வு நாளன்று காலை 9 முதல் 2 மணி வரை தடையில்லாத மின்சாரம் வழங்கப்படும். மையங்களில் குடிநீர், கழிப்பறை வசதி ஏற்படுத்தி தரப்படும்" என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.