"வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்கள் ஆன்-லைன் மூலம் உயிர்பதிவேட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை சரி பார்த்துக்கொள்ளலாம்" என, நாமக்கல் மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முற்றிலும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு புதிய பதிவு, புதுப்பித்தல், கூடுதல் பதிவு போன்ற பதிவுகள் ஆன்-லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கனவே பராமரிப்பில் இருந்து வரும் மனுதாரர்களின் விவரங்கள் ஆன் லைன் உயிர்பதிவேட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டதில் ஒருசில பதிவுதாரர்களின் பதிவு விவரங்கள் முழுமையாக ஆன்-லைன் உயிர்பதிவேட்டில் இடம் பெறவில்லை.
அவ்வாறு குறைபாடு உள்ள மனுதாரர்களின் விவரங்கள், தொழில் குறியீட்டு எண் வாரியாக சரிபார்த்திடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை, தேர்ச்சி பெறாத பதிவுதாரர்கள் மற்றும் துப்புரவு பணிக்காக பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் தங்களுடைய பதிவு விவரங்களை ஆன்லைன் மூலம் அவரவர் தங்கள் பதிவை சரி பார்த்துக்கொள்ளலாம்.
சரியான பதிவு இல்லாதவர்களும், ஆன்லைன் மூலம் பதிவட்டை பிரிண்ட் அவுட் எடுக்க இயலாதவர்களும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு அனைத்து கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஜாதிச் சான்றிதழ் மற்றும் ரேஷன்கார்டு ஆகியவற்றுடன் அலுவலக நாட்களில் நவம்பர் 26ம் தேதிக்குள் நேரில் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.