Pages

Wednesday, November 20, 2013

டிட்டோஜேக் - ஏழு சங்கங்களுக்கும் மாவட்டங்கள் ஒதுக்கீடு

டிட்டோஜேக் கூட்ட முடிவின் படி போராட்ட ஆயத்த கூட்டங்கள் நடத்தவும்,தொடர்பணிக்காகவும் டிட்டோஜாக் மாவட்டதொடர்பாளர் நியமிக்கவும் ஏதுவாக சமபங்கீடாக 7 சங்கங்களும் இணைந்து தங்களுக்குண்டான மாவட்டங்களை ஒதுக்கீடு செய்து செயலாற்றுவதென முடிவாற்றப்பட்டது. ஒதுக்கீடு பெற்ற மாவட்டத்தின் சங்கத்தை சார்ந்த மாவட்டசெயலாளர் அந்தந்த மாவட்ட டிட்டோஜாக் தொடர்பாளராக( CO-ORDINATOR) செயல் படுவார்கள்.

மாவட்டப்பங்கீடு விவரம்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

நாமக்கல்,ஈரோடு,திருப்பூர்,மதுரை,மற்றும் சென்னை ஆகிய 5 மாவட்டங்கள்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

சிவகங்கை,தர்மபுரி, இராமநாதபுரம்,பெரம்பலூர்,திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்கள்


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்

நாகை,திருவாரூர்,கிருஷ்ணகிரி,திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்கள்

தமிழக ஆசிரியர் கூட்டணி

அரியலூர்,திண்டுக்கல்,சேலம்,நீலகிரி,கோவை  ஆகிய 5 மாவட்டங்கள்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

தேனி,காஞ்சிபுரம்,விருதுநகர்,தூத்துகுடி, கன்யாகுமரி ஆகிய 5 மாவட்டங்கள்

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

தஞ்சாவூர்,திருச்சி,புதுக்கோட்டை,கரூர் ஆகிய 4 மாவட்டங்கள்

தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்

திருவண்ணாமலை,வேலூர்,விழுப்புரம்,கடலூர் ஆகிய 4 மாவட்டங்கள்

1 comment:

  1. அன்பான ஆசிரிய பெருந்தகைகளே, இடை நிலை ஆசிரியரின் ஊதிய முறண்பாட்டை களை தாங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. வெறுமனே ஒன்றியம், மாவட்டம், மா நில அளவில் ஆர்ப்பாட்டம் , கோசம் என்று மட்டுமே செய்தால மட்டும் தீர்வு ஆகாது. மத்திய அரசின் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வேண்டும் என்று உரக்க கத்தினால் மட்டும் போதாது.
    அரசு நமக்கு 10ஆம் வகுப்பு தகுதிக்கான ஊதியத்தையே நந்து வருகிறது. நமது தகுதிக்கு (Educational Qualification) (+2 & டிப்ளமோ)சாரியான ஊதியம் வேண்டும் என்பதை அரசுக்கு உணர்த்த வேண்டும். பண பலனில் எவ்வளவு பாதிப்பு உள்ளது என்பதை உரிய ஆதாரங்களுடன் அரசுக்கு உணர்த்த வேண்டியதும் நமது கடமை. மேலும் முதல்வரின் கவனத்துக்கு முறையாக கொண்டு சேர்க்க வழிவகைகளை செய்ய வேண்டும். நன்றி.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.