சி.பி.எஸ்.இ., வாரிய பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது. அடுத்தாண்டு மார்ச் 1ம் தேதி CBSE பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளன. அதில் 10ம் வகுப்பு தேர்வை மட்டும் சுமார் 1.8 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். இது கடந்தாண்டை விட 10% அதிகம்.
பிளஸ் 2 தேர்வைப் பொறுத்தளவில், 80,000 மாணவர்கள் எழுதவுள்ளனர். இது கடந்தாண்டைவிட 20% அதிகம். CBSE வாரிய சென்னைப் பிராந்தியத்தில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மராட்டியம், கோவா, புதுச்சேரி, அந்தமான் - நிகோபர் தீவுகள் மற்றும் டாமன் - டயூ தீவுகள் போன்ற பகுதிகள் அடக்கம்.
CBSE தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரிக்க காரணம், புதிதாக தோன்றிய CBSE பள்ளிகளே என்றும், சுமார் 60 புதிய பள்ளிகள் வரை, CBSE இணைப்பு பெற்றுள்ளன என்றும் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.