Pages

Sunday, November 3, 2013

யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ செவ்வக கட்டத்தில் ‘நோடா’ பட்டன்

தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள், அதை பதிவு செய்வதற்காக, வாக்குப்பதிவு இயந்திரத்தில் செவ்வக வடிவ கட்டத்தில் ‘நோடா’ (NOTA) பட்டன் சேர்க்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தலில் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள், வாக்குப்பதிவு மூலம் அதை பதிவு செய்வதற்காக ‘யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ (நோடா-NON OF THE ABOVE)என்ற பட்டனை வாக்குப்பதிவு இயந்திரத்திலும், வாக்குச்சீட்டிலும் சேர்க்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த மாதமும், டிசம்பரிலும் நடக்க உள்ள 5 மாநில தேர்தலிலேயே இதை அமல்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக தனி சின்னத்தை அது அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் கடைசி வேட்பாளரின் பெயருக்கு கீழ், செவ்வக வடிவ கட்டத்தில் ‘NOTA’ என்ற வாசகம் அமைக்கப்படுகிறது. எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள், இந்த பட்டனை தட்டினால் அவர்களின் விருப்பம் பதிவாகும். அதேபோல், வாக்குசீட்டுகளிலும் இது அமைக்கப்படும் . இதை உடனடியாக அமல்படுத்தும்படி அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.