Pages

Friday, November 1, 2013

நவம்பர் 5ல் விண்ணில் பாய்கிறது "மங்கள்யான்"

"நவம்பர் 5ம் தேதி மதியம் "மங்கள்யான்" செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும்" என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.


இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் ராதாகிருஷ்ணன், பெங்களூரில் இருந்து நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, "மங்கள்யான்" செயற்கைக் கோள், பி.எஸ்.எல்.வி., சி-25 ராக்கெட் மூலம், விண்ணில் செலுத்தப்படும். இதற்கான ஒத்திகை, "கவுன்ட் டவுன்" நாளை (இன்று) நடத்தப்படும். நவ., 1ம் தேதி, ராக்கெட்டை ஏவுவதற்கான ஆய்வு பணி நடக்கும். நவ., 3ம் தேதி, "கவுன்ட் டவுன்" துவங்கும். நவ., 5ம் தேதி மதியம் பி.எஸ்.எல்.வி., சி - 25 விண்ணில் செலுத்தப்படும்.

ஜி.எஸ்.எல்.வி., டி - 5 ராக்கெட்டின், உதிரி பாகங்கள் பொருத்தும் பணி, நடந்து வருகிறது. டிச., 15ம் தேதி, ஜி.எஸ்.எல்.வி., டி - 5 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்.

ஸ்ரீஹரிகோட்டாவில், மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி குறித்து, ஆய்வு நடந்து வருகிறது.இவ்வாறு, ராதாகிருஷ்ணன் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.