பீகார் மாநில அரசு, பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தகுதி தேர்வு நடத்தி வருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியராக தொடர்ந்து பணியாற்ற முடியும்,
இந்நிலையில் 5ஆம் வகுப்புக்கான ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் தகுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் ஆங்கிலம், கணிதம், பொதுஅறிவு மற்றும் ஹிந்தி பாடத்தில் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. தேர்வில் 43.447 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்,
இதில் 24 சதவீதம் பேர் அதாவது 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெயிலானார்கள், அதே நேரத்தில் 32.833 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு மற்றொரு முறை வாய்ப்பளிக்கப்படும் என்றும், அதில் தோற்றால் ஆசிரியராக பணியாற்ற முடியாது என்றும் பீகார் அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.