விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அருளப்பன் உள்பட 129 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:நாங்கள் பள்ளி கல்வித்துறையில் கடந்த 10 முதல் 20 ஆண்டுகளுக்கு மேலாக உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு இதுவரை தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் கிடைப்பது இல்லை.
இந்த சம்பளத்தை தர கோரி அரசுக்கு பல முறை கோரிக்கை மனு கொடுத்தும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உயர்நீதிமன்றம் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் வழக்கில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். அப்போது தமிழக அரசு சார்பாக அரசு சிறப்பு வக்கீல் கிருஷ்ணகுமார் ஆஜராகி, மனுதாரர்கள் இடைநிலை ஆசிரியர்களாக பள்ளி கல்வித் துறையில் உயர்நிலை, மேல்நிலை பள்ளித்துறையின் கீழ் பணியாற்றி வருகிறார்கள். தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொடக்க பள்ளிகல்வித்துறையின் கீழ் பணியாற்றி வருகிறார்கள். இரண்டும் வேறு வேறு துறை எனவே மனுதாரர்களுக்கு இணையான சம்பளம் தர முடியாது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.இதை நீதிபதி ஏற்றுக்கொண்டு, உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம் தர முடியாது என்று தீர்ப்பு கூறினார்.
Horzontal News going fast irretate eyes
ReplyDelete