சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் வழக்கம்போல் வரும் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் சி.பி.எஸ்.இ. தேர்வுகள் எப்போது நடைபெறும் என மாணவர்கள் எதிர்பார்ப்போடு இருந்தனர்.
பொதுத்தேர்தல் காரணமாக தேர்வுகள் முன்கூட்டியே நடைபெறுமா அல்லது தள்ளிவைக்கப்படுமா என பெற்றோர்கள் தொடர்ந்து தொலைபேசி மூலம் கேட்டு வந்தனர்.
இந்த ஆண்டு பொதுத்தேர்வு தேதிகளில் எந்தவித மாற்றமும் இல்லை என அறிவிப்பதற்காகவே தேர்வு தொடங்கும் தேதி மட்டும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில், தேர்வு அட்டவணை டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் தேர்வு தேதி, தேர்தல் ஆணையத்துக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.