Pages

Wednesday, October 16, 2013

சத்துணவு திட்டத்தில் மாணவர்களுக்கு பால் வழங்க கோரிக்கை

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை பசும்பால் லிட்டருக்கு 5 ரூபாயும், எருமை பால் லிட்டருக்கு 10 ரூபாயுமாக உயர்த்தியும், சத்துணவு திட்டத்தில் மாணவர்களுக்கு பால் வழங்க முதல்வர் உத்தரவிடவேண்டும், என பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரோட்டில், ஈரோடு - திருப்பூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்க பொருளாளர் ராமசாமி தலைமையில் நடந்தது.

தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியாக பால் உற்பத்தியை,ஒரு கோடி லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும், என அறிவித்திருந்தார். தொடர்ந்து பால் கொள்முதல் 25 லட்சம் லிட்டராக உள்ளது.

பால் நுகர்வோர் பாதிக்காத வகையில் கர்நாடகா அரசு வழங்கும் 4 சதவீத ஊக்க விலையை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். அதன்படி பசும்பால் லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தி 25 ரூபாயாகவும், எருமை பால் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி 36 ரூபாயாக அறிவிக்க வேண்டும்.

பள்ளியில் சத்துணவு திட்டத்தில் பால், பால் பவுடர் வழங்கிட உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், மாநில செயற்குழு கூட்டத்தை கூட்டி, பால் உற்பத்தி நிறுத்தம், கறவை மாடுகளுடன் மாவட்டந்தோறும் மறியல் ஆகியவை நடத்தப்படும், என மாநில தலைவர் செங்கோட்டுவேல் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.