Pages

Monday, October 28, 2013

"கேள்வி கேட்பதன் மூலமே மாணவர்கள் பாடங்களை தெளிவாக கற்க முடியும்"

வகுப்பறையில் மாணவர்கள் கேள்வி கேட்பதன் மூலம்தான் பாடங்களை தெளிவாக கற்க முடியும் என காந்திகிராம பல்கலை துணைவேந்தர்(பொறுப்பு) ஜோசப் துரைராஜ் பேசினார்.

பல்கலை கல்வித்துறை சார்பில்ஆசிரியர் தின சிறப்பு சொற்பொழிவு நடந்தது. துறை தலைவர் ஜாகிதாபேகம் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற பல்கலை துணைவேந்தர் (பொறுப்பு) ஜோசப் துரைராஜ் பேசும்போது,

"சர்வதேச அளவிலான தரவரிசையில் இந்திய பல்கலைக்கழகங்கள் 200க்கும் பிந்தைய இடத்தில்தான் உள்ளன. ஆசிய அளவில் கூட இவை தர வரிசையில் பின்தங்கியுள்ளன என்பது வருந்தத்தக்கது. நமது நாட்டில் ஆசிரியர்களை மையப்படுத்திய பாடமுறைகள் அமைந்திருப்பதுதான் இத்தகைய பின்னடைவிற்கு முக்கிய காரணம். மாணவர்களை மையமாக கொண்டு பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டால் கல்வித்தரம் வெகுவாக உயர்வடையும்.

பள்ளி முதல் கல்லூரி, பல்கலை வரையிலும் வகுப்பறைகளில் மாணவர்கள் கேள்வி கேட்பதன் மூலம்தான் சந்தேகங்கள் நீங்கி பாடங்களை தெளிவாக கற்க முடியும். பாடத்திற்கு அப்பாற்பட்ட உலகியல் சார்ந்த விஷயங்களையும் மாணவர்கள் அறிய முடியும்," என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.