நெல்லை மாவட்ட பெண் அதிகாரியை கண்டித்து உண்ணாவிரதம் இருந்த ஆசிரியர் குடும்பத்தினர் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே ஏர்வாடியில் உள்ள தனியார் துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியையாக இருந்தவர் யுனைசிகிரேனா. அந்த பள்ளியின் நிர்வாகம் மாற்றப்பட்டதால், நிர்வாகியின் மனைவியை தலைமையாசிரியையாக பணிநியமனம் செய்வதற்காக இவரை பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
இவருக்கு உடந்தையாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பெண் அலுவலர் செயல்பட்டாராம். எனவே பெண்அதிகாரியை கண்டித்து நேற்றும், இன்றும் நெல்லை, மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பாக ஆசிரியை யுனைசி கிரேனா, அவரது கணவர் கிப்சன், ஏழு வயது மகன் கிரேசியஸ் ஆலிவ் மற்றும் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க மாநில தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே போலீசார் அவர்களை கைது செய்து ஜங்ஷன் ஸ்டேஷன் அழைத்துச்சென்றனர். பின்னர் மாலையில் விடுவித்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.