மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள், தங்களின் பிளஸ் 2 படிப்பில், வேதியியல் பாடத்தை படிக்காவிட்டாலும், அவர்கள் தங்களின் விருப்பத்தை நிறைவேற்ற தடையில்லாதவாறான ஒரு புதிய நடைமுறையைக் கொண்டுவர ஏ.ஐ.சி.டி.இ., ஆலோசனை வழங்கியுள்ளது.
இதன்மூலம், வேதியியலை ஒரு பாடமாக, பள்ளி மேல்நிலையில் படிக்காத மாணவர்கள், பெரிதும் பயன்பெறுவார்கள்.
இதுகுறித்து AICTE வட்டாரங்கள் கூறியதாவது: தங்களின் பள்ளி மேல்நிலைப் படிப்பில் வேதியியலைப் படிக்காவிட்டாலும், அவர் JEE நுழைவுத்தேர்வை எழுதும் வகையில் விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். இதன்மூலம், வேதியியல் படிக்காமல், கணினி அறிவியல், மெக்கானிக்ஸ், பயோடெக்னாலஜி போன்ற பாடங்களைப் படித்தவர்கள், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர முடியும் என்று அந்த வட்டாரங்கள் கூறின.
தற்போதைய நிலையில், மருத்துவப் படிப்பில் சேர, உயிரியல், வேதியியல் மற்றும் இயற்பியல் உள்ளிட்ட பாடங்களில் குறைந்தபட்சம் 45% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அதேபோல், பொறியியல் படிப்பில் சேர, இயற்பியல், கணிதம் மற்றும் வேதியியல் போன்ற பாடங்களில் குறைந்தபட்சம் 45% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது.
ஜே.இ.இ. தேர்வுமுறையில் மாற்றம்
மேலும், JEE தேர்வு விதிமுறைகளில் சில மாற்றங்களைக் கொண்டுவரவும் JEE வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, தற்போது ஒரேநாளில் நடக்கும் அந்த தேர்வை, அடுத்த ஆண்டு முதல் 2 நாட்களாக பிரித்து நடத்த உத்தேசிக்கப்பட்டு வருகிறது.
2013ம் ஆண்டின் JEE தேர்விலிருந்து உயிரியல் பாடம் தள்ளிவைக்கப்பட்ட பிறகு, இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களுக்கான மதிப்பெண்கள் அதிகரிக்கப்பட்டன. அதன்படி, இரண்டு பாடங்களுக்கும் தலா 50 மதிப்பெண்களாக இருந்த நிலை மாறி, தலா 75 மதிப்பெண்களாக அதிகரிக்கப்பட்டது. மேலும், தனித்தனியாக பிரிக்கப்பட்ட இந்த இரண்டு பாடங்களையும் எழுத, தலா 1.30 மணி நேரங்கள் ஒதுக்கப்படும்.
கணிதப் பாடத்திற்கு மட்டும் 100 மதிப்பெண்கள் மற்றும் அதை எழுதி முடிக்க, 2 மணி நேரங்கள் வழங்கப்படும். JEE தேர்வு 2 நாட்களாக நடத்தப்படும் முடிவு எடுக்கப்பட காரணம், மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகிய படிப்புகளை மேற்கொள்ள நினைப்பவர்கள் சிரமப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, முதல் கட்ட தேர்வில், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களும், இரண்டாம் கட்ட தேர்வில் உயிரியல் பாடமும் இருக்கும். இதன்மூலம், ஒரேநாளில் JEE தேர்வுக்காக, கிட்டத்தட்ட 10 மணிநேரங்கள் செலவழிக்க வேண்டிய கடின நிலையிலிருந்து, மாணவர்களுக்கு விடிவு கிடைக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.