Pages

Wednesday, October 30, 2013

மாணவனின் நேர்மை: பாராட்டிய பொதுமக்கள்

தேனி உழவர்சந்தையில் கீழே கிடந்த பணத்தை எடுத்த கல்லூரி மாணவன் அதை உரியவரிடம் ஒப்படைத்தார்.

தேனி உழவர்சந்தையில் காய்கறி விற்பனை செய்பவர் ராஜா. இவர் நேற்று காலை காய்கறி விற்பனை செய்து கொண்டிருந்த போது ஒரு வேலையாக எழுந்து சென்றார். அப்போது பாக்கெட்டில் இருந்த பணம் 2000 ரூபாய் சந்தையில் ஒரு இடத்தில் கீழே விழுந்து விட்டது.

சந்தைக்கு காய்கறி வாங்க வந்த தேனியை சேர்ந்த மதன்குமார், 21, என்ற கல்லூரி மாணவர் இந்த பணத்தை எடுத்தார். எடுத்து சந்தை அலுவலகத்திற்கு வந்து உதவி நிர்வாக அலுவலர் தாமோதரன், செந்தில்குமார் ஆகியோரிடம் கொடுத்தார். அவர்கள் மைக்கில் இது குறித்து அறிவிப்பு செய்தனர்.

இதனிடையே பணத்தை காணாமல் தேடிக் கொண்டிருந்த ராஜா அலுவலகத்திற்கு ஓடி வந்தார். அந்த பணம் தன்னுடையது என்பதை அடையாளத்துடன் கூறினார். உடனே நிர்வாக அலுவலர்கள் சந்தைக்குள் வந்திருந்த விவசாயிகள், பொதுமக்களை அழைத்து அவர்கள் முன்னிலையில் இந்த பணத்தை ராஜாவிடம் ஒப்படைத்தனர்.

பணத்தை பெற்ற ராஜாவும், அங்கு கூடியிருந்த மக்களும் மாணவன் மதன்குமாரின் நேர்மையை பாராட்டினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.