Pages

Wednesday, October 30, 2013

1093 உதவி பேராசிரியர் தேர்வுக்கு இடைக்கால தடை: ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.கோவிந்தன், சி.மணி, ஜி.அன்பழகன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 1093 உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 28–5–2013 அன்று விளம்பரம் வெளியிடப்பட்டது.

இதில், உதவி பேராசிரியர் பதவிக்கு பல்கலைக்கழகம் மானிய குழு நிர்ணயம் செய்துள்ள தகுதி மதிப்பெண்களுக்கு எதிராக ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி மதிப்பெண்களை நிர்ணயம் செய்துள்ளது.

எனவே, உதவி பேராசிரியர் பதவிக்கு ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்புக்கும், அதன் அடிப்படையில் தேர்வு நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.


இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வக்கீல் ஜெ.லட்சுமிநாராயணன் ஆஜராகி வாதம் செய்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘கல்லூரி உதவி பேராசிரியர் பதவிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் நிர்ணயம் செய்துள்ள தகுதி மதிப்பெண்கள்,பல்கலைக்கழக மானிய குழு நிர்ணயம் செய்த தகுதி மதிப்பெண்களுக்கு எதிராக உள்ளது. எனவே, 1093 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது’’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.