Pages

Wednesday, October 2, 2013

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்: மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்

அனைத்து ஆசிரியர்களும், 2016 க்குள், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டுமென, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டதால், தனியார்
பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில், பள்ளிகளில் 10 ம் வகுப்பு வரை, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனவும், 2010 ஆக., 23 க்கு பிறகு, நியமனம் பெற்ற ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை, ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தியதால், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.

 இந்நிலையில், 2016 க்குள் மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்களும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென, இயக்குனரகமும் உத்தரவிட்டது. இதனால், பல தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


             தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஏற்கனவே, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சில ஆசிரியர்கள், அரசு பள்ளிக்கு சென்று விட்டனர். வருங்காலங்களிலும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள் அரசு பணிக்கு தான் செல்வர் , தனியார் பள்ளியை விரும்ப மாட்டார்கள். இதனால், தனியார் பள்ளிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்படும்" என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.