Pages

Wednesday, October 2, 2013

சர்வர் பிரச்னையால் ஆசிரியர்கள் விரக்தி: பள்ளி விவர சேகரிப்பு பணியில் தேக்கம்

பள்ளி விவரம் சேகரித்துஆன்-லைனில் பதிவேற்றும் பணியில்,சர்வர் பிரச்னையால்பல மடங்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதால்,பள்ளி தலைமை ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.


இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகள்அதில் படிக்கும் மாணவ,மாணவியர்ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும்,தொகுக்கும் பணி ஆன்-லைனில் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில்புதிதாக சேர்பவர்களின் விவரங்களை,அப்பள்ளி தலைமை ஆசிரியர்குறிப்பிட்ட தினத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும். இதற்காகஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியே, 'யூசர்ஐ.டி.மற்றும் 'பாஸ்வேர்டுவழங்கப்பட்டுள்ளது. ஆனால்இணையதளத்தின் சர்வர் எப்போதும், 'ஹேங்ஆன நிலையில்இருப்பதால்ஒரு மாணவனின் விவரத்தை பதிவு செய்யபல மணி நேரம் செலவிட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் பள்ளி தலைமைல ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.



இதுகுறித்துபள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:'எமிஸ்இணையதளத்தில்மாணவர்களின் விவரங்களை பதிவு செய்யும் பணியில், 30க்கும் மேற்பட்ட கேள்விகளும்பதில்களும் அடங்கியுள்ளது. இவற்றை நல்ல முறையில்வேகமாக செய்தாலேஒரு மாணவனுக்கு அரை மணி நேரமாவது ஆகும். ஆனால்சர்வர் பிஸியாக இருப்பதால்ஒரு மாணவனின் விவரத்தை ஏற்றுவதற்கு கூடபல மணி நேரம் வரைகம்ப்யூட்டர் முன் காத்திருக்க வேண்டியுள்ளது. கல்வித் துறையினரோ, 'இன்னும் முடிக்கவில்லையா?' எனடென்ஷனை அதிகப்படுத்துகின்றனர். இதில் கம்ப்யூட்டர் மற்றும் இணையதள இணைப்பு இல்லாத துவக்கப்பள்ளி ஆசிரியர்களின் நிலை பரிதாபம். அவர்கள் தனியார் இன்டர்நெட் சென்டர்களுக்கு சென்று,அங்கு தவம் கிடக்கின்றனர். இதற்காக சொந்தப்பணத்தை செலவிட வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சர்வர் பிரச்னையை சரி செய்ய வேண்டும் அல்லது எமிஸ் பதிவேற்றம் செய்யகால அவகாசம் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறுஅவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.