மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வை அறிவித்த தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நன்றி தெரிவித்துள்ளது.
இச்சங்கத்தின் கூட்டம் மாநிலத் தலைவர் மோகன்தாஸ் தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். சங்க நிர்வாகிகள் மாயிஸ், பரமசாமி பங்கேற்றனர்.
கூட்டத்தில், தமிழக ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 10 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
jsr koottani thane nanri sonnathu.
ReplyDelete