Pages

Monday, October 14, 2013

ரேஷன் கார்டுகளை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளும் வசதி! ! ! !

ரேஷன் கார்டுகளை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளும் வசதிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. ரேஷன் கார்டுக ள் ஸ்மார்ட் கார்டு முறைக்கு மாற்றப்பட உள்ளன. இதற்கு போதிய அவகாசம் தேவைப்படுவதால் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளே 2012 வருடத்துக்கும் செல்லும் என அரசு அறிவித்துள்ளது.
ஆனால் அந்தந்த கடைகளில் சென்று கார்டை கொடுத்து 2012ம் ஆண்டுக்கான இணைப்புத்தாளை பொருத்தி, கடையில் கையொப்பம் மற்றும் ‘சீல்’ பெற வேண்டும். அப்போதுதான் கார்டுகள் செல்லுபடியாகும் என்று அரசு அறிவித்தது. புதுப்பித்தலுக்கு முதலில் ஜனவரி 31, 2012 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அந்த கெடு இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது . தற்போது மார்ச் 31, 2012 வரை புதுப்பித்துக் கொள்ளலாம். பொதுமக்கள் நலன் கருதி ஆன்லைனில் புதுப்பிக்கும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், சிவில் சப்ளைஸ் துறை சார்பில் http://www.consumer.tn.gov.in/என்ற பெயரில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் ‘கார்டு புதுப்பித்தல் 2012’ என்ற பகுதிக்கு சென்று ரேஷன் கார்டின் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பிறகு அட்டையின் நிறம், குடும்பத்தில் சேர்க்கப்ப ட வேண்டியவர், நீக்கப்பட வேண்டியவர், சிலிண்டர்கள் விவரம் போன்ற தகவல்களோடு, தொலைபேசி எண் போன்ற விவரங்களையும் இணைய தளத்தில் பூர்த்தி பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பின்னர், ‘கமெண்ட்ஸ் என்ன?’ என்ற கேள்வி வரும். விருப்பம் இருந்தால் கமெண்ட்ஸ் எழுதலால். இல்லாவிட்டால், ‘இல்லை’ என்று எழுதி, ‘சப்மிட்’ செய்தால் சில நொடிகளிலேயே நமது ரேஷன் கார்டு புதுப்பிக்கப்பட்டு, துணை ஆணையர் கையெழுத்துடன் இணையதளத்தில் ரசீது வருகிறது. இந்த ரசீதை கார்டின் பின்பக்கத்தில் ஒட்டிக் கொள்ள வேண்டும். அவரவர் பகுதிக்குட்பட்ட ரேஷன் கடைக்கு சென்று, ஆன்லைன் பதிவு விவரங்களை எடுத்துச் சொல்லி கார்டில் கையெழுத்து மற்றும் சீல் பெற்றுக் கொள்ள வேண்டும். வேலைப் பளு, குடும்ப சூழ்நிலை காரணமாக பலர் தங்கள் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ள நேரம் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முறை மூலம் ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்கப்பட்டு ரசீதும் கிடைத்துவிடுவதால் மக்கள் இந்த முறையை பெரிதும் வரவேற்கின்றனர்.O
ONLINE RENEWAL OF RATION CARDS IN TAMILNADU http://www.consumer.tn.gov.in/

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.