Pages

Saturday, October 12, 2013

அடுத்த 6 மாதங்களில் 2 லட்சத்திற்கும் மேலான தமிழக அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு

தமிழக அரசுப் பணியில் ஏ, பி, சி, டி என்ற 4 பிரிவுகளில்,அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை வேலை பார்க்கின்றனர். 4 பிரிவுகளிலும் சேர்த்து 13 லட்சத்து 30 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர்.

இதுதவிர, 5 லட்சத்து 20 ஆயிரம் பேர் ஓய்வு பெற்று பென்ஷன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், அடுத்த 6 மாதத்திற்குள்,குறிப்பாக 2014-ம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள், மொத்த ஊழியர்களில் 20 சதவீதம் பேர் ஓய்வுபெற இருக்கின்றனர். அதாவது, 2 லட்சத்திற்கும் மேலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர். இதனால், மற்றவர்களுக்கு பணிச் சுமை அதிகமாகும்.

அரசுக்கு தற்போதுள்ள நிதிச் சுமையால், ஒரே நேரத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப முடியாத நிலை உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக பணியாளர் தேர்வு நடத்தி, காலிப் பணியிடங்களை நிரப்ப முடியும்.


ஆனால், ஒரு சில பிரிவுகளில் காலி பணியிடங்களை ஒரே நேரத்தில் நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால்,அந்தப் பிரிவுகளில் கம்ப்யூட்டர், பேக்ஸ், மொபைல் போன் போன்ற வசதிகள் இருக்கின்றன. அதனால், முன்பு இருந்த அளவு பணியாளர்கள் தேவையில்லை.

மேலும், பென்ஷன் தாரர்கள் எண்ணிக்கையில் ஓய்வுபெறும் இந்த2 லட்சம் பேர் சேரும் நிலையில், மேலும் அதே அளவு பணியாளர்கள் வேலைக்கு சேர்க்கப்பட்டால் நிதிச்சுமை மேலும் அதிகமாகும். இதே அளவிலான பணியாளர்கள் 2016-ம் ஆண்டும் ஓய்வுபெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்தத் தகவலை என்.ஜி.ஓ. சங்க முன்னாள் தலைவர் கோ.சூரியமூர்த்தி தெரிவித்தார்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.