ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது' விடுமுறை நாட்களில் ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்றார் ஆசிரியர் மன்ற மாநிலப் பொதுச் செயலாளர் க. மீனாட்சிசுந்தரம். அறந்தாங்கியில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒன்றியக் கிளை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழாவில் அவர் மேலும் பேசியது:
ஆசிரியர்களுக்கு சனிக்கிழமைகளில் வட்டார வள மையம் மற்றும் அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்தல் ஆணையம் தேர்தல் வகுப்புகளை நடத்துவதால், ஆசிரியர்கள் ஓய்வின்றி பணியாற்றும் நிலை ஏற்படுகிறது. எனவே, விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கக் கோரியும், பங்கேற்பு சேமநலநிதித் திட்டத்தை திரும்பப் பெற கோரியும், நவம்பர் 24-ம் தேதி சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றார் அவர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.