Pages

Wednesday, October 23, 2013

நவம்பர் 5ல் விண்ணில் பாய்கிறது "மங்கள்யான்" செயற்கைகோள்

செவ்வாய் கிரகத்திற்கு, "மங்கள்யான்" செயற்கைகோள் அடுத்த மாதம், 5ம்தேதி ஏவப்படும் என்று, இஸ்ரோ தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான காரணிகள் உள்ளனவா என்பது குறித்தும், கனிம வளம் குறித்தும் ஆய்வு செய்யும் நோக்கில், முதல் செயற்கைகோள், "மங்கள்யான்" இம்மாத இறுதியில் ஏவப்படும் என, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்து இருந்தது. ஆனால் பசிபிக் பெருங்கடலில் நிலவிய, மோசமான வானிலை காரணமாக, தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், விண்கலம் ஏவுவதற்கான வாரியத்தின் கூட்டம், நேற்று நடந்தது. இதில், மங்கள்யான் செயற்கைகோளை அடுத்த மாதம், 5ம் தேதி ஏவமுடிவு செய்யப்பட்டது. இதன்படி, சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நவம்பர் 5ம் தேதி, செவ்வாய்கிழமை பி.எஸ்.எல்.வி., சி 25 ராக்கெட் மூலம் பிற்பகல், 3:28 மணிக்கு ஏவப்படுகிறது. இதற்கான அறிவிப்பை, நேற்று, இஸ்ரோ வெளியிட்டது. மங்கள்யான் செயற்கைகோளுக்காக, 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.