Pages

Monday, October 21, 2013

முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்த்து வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகிறது

முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்த்து   மதுரை ஐகோர்ட் கிளை யில் விசாரணைக்கு வருகின்றதுமுதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும், 22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14இடங்களில் நடக்கின்றன. இதில் பங்கேற்பதற்கானஅழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
        
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு டிஆர்பி விளக்கக்  குறிப்பேட்டில்  குறிப்பிட்டவாறு வகுப்புவாரி  இடஒதுக்கீட்டின் கீழ்  இறுதி கட் -ஆப்  மதிப்பெண்  பெற்றவர்கள் அனைவரும்  அழைக்கப்படவில்லை .வயதில்  மூத்தோர்  மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர் .இதனை  எதிர்த்து   மதுரை ஐகோர்ட் கிளையில் நெல்லை  மாவட்டத்தைச் சேர்ந்த  இரு  தேர்வர்களும்  இராமநாதபுரம் மாவட்டதைச்  சேர்ந்த ஒருவர் என 3 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இவ்வழக்குகள் இன்று  (21 அக் ) நீதியரசர்   நாகமுத்து அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வருகின்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று (அக்.21)மாலை  வழக்கின் நிலை குறித்து  தெரியவரும்.

2 comments:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.