Pages

Monday, October 21, 2013

விடுதிகளை கண்காணிக்க தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுரை

விடுதியில் மாணவன் கொலை செய்யப்பட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் விடுதிகளை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் மாணவன் கொலை நடந்த பள்ளியின் விடுதியை மூடுவதற்கு, முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டள்ளார்.

திண்டுக்கல் ம.மு.,கோவிலூர் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கியிருந்த ஆறாம் வகுப்பு மாணவன் ஹரிபிரசாத்தை, அதே விடுதியில் தங்கியிருந்த 10ம் வகுப்பு மாணவன் கொலை செய்தார். இதையடுத்து அந்த பள்ளியின் விடுதியை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் மாணவன் கொலை செய்யப்பட்ட சம்வத்தையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி விடுதிகளை தலைமை ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணிக்கவும், மாணவர்களுக்குள்ள பிரச்னைகளை உடனடியாக தீர்க்கவும், விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லாத மாணவ, மாணவிகளை பெற்றோருடன் அனுப்பி வைக்க வேண்டும்.

1 comment:

  1. ஆட்சிபீடம் மற்றும் அதிகார மையத்தில் அமர்ந்திருப்பவர்கள், கல்வியாளர்கள் மற்றும் உலவியல் நிபுணர்கள் சற்றே சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. மாணவர்களை முன்புபோல கண்டித்து / தண்டித்து வளர்த்தாலொழிய இந்த நிலைமை மாறாது. இதுபோன்ற குற்றச்செயல்கள் பெருமளவில் தொடரத்தான் செய்யும்.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.