Pages

Monday, September 30, 2013

புதிய தொடக்க பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடம் நிரப்ப உத்தரவு

புதிதாக துவங்க உள்ள 54 தொடக்க பள்ளிகளுக்கு,தலைமை ஆசிரியர்,ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள,"கல்வித்துறை செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.குடியிருப்பு பகுதிகளில்,மக்கள் தொகை 300 பேருக்கு,ஒரு தொடக்க பள்ளி அமைக்கவேண்டும் என்ற அடிப்படையில்,மாநிலம் முழுவதும் கடந்தாண்டு,கள ஆய்வு செய்தனர்.
ஆய்வில்,54 குடியிருப்பு பகுதிகளில் தொடக்கப்பள்ளி இல்லாதது கண்டறியப்பட்டது.இப்பகுதிகளில்,புதிய தொடக்க பள்ளிகளை விரைந்து துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான,ஆசிரியர்கள் சம்பள விபரங்களை தொடக்க கல்வி இயக்குனர்,அரசிடம் வழங்கினார். அதன்படி,2013-14ல் துவங்க உள்ள,தொடக்க பள்ளிகளுக்கென தலைமை ஆசிரியர்,இடைநிலை ஆசிரியர் நிர்ணயம்,தர ஊதியம் குறித்து,அரசு உத்தரவிட்டுள்ளது.அதில்,புதிதாக துவங்கும் 54 பள்ளிகளுக்கு,இடைநிலை ஆசிரியருக்கு ரூ.5200-20200+2800;தலைமை ஆசிரியருக்கு ரூ.9300-34,800+4500 என்ற தர ஊதியமும் நிர்ணயித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.