Pages

Monday, September 30, 2013

அரசு ஊழியர்களுக்கு 30-ம் தேதி ஊதியம் வழங்க நடவடிக்கை

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழக்கம் போல, வரும் 30-ம் தேதி ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாவட்ட கருவூல அலுவலர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தடையின்றி ஊதியம் கிடைக்க மாவட்ட கருவூலம் மற்றும் சார் கருவூலங்களில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டியல்களை சரி பார்த்து, அங்கீகரிக்கப்பட்டு அந்தந்த ஸ்டேட் பாங்க் மூலம் சென்னை தேசிய அனுமதி பிரிவுக்குச்  சென்று, இறுதியாக ரிசர்வ் வங்கி மூலம் பணியாளர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.

அதன்படி, கடந்த 27-ம் தேதி வரை பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அனைவருக்கும் 30-ம் தேதி ஊதியம் வழங்கப்படும். தேவையற்ற குழப்பம் அடைய வேண்டாம். இதுகுறித்து மேலும் விளக்கம் பெற விரும்புவோர்,

கருவூல அலுவலர், மாவட்ட கருவூலம், கடலூர் என்ற முகவரியில் நேரிலோ, அல்லது 94439 48802, 90037 29874 எனற செல்போன் எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

1 comment:

  1. அடகு கடைகளுக்கு ஆதங்கம்

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.