Pages

Monday, September 16, 2013

இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் தற்போதைய தேவை என்ன?

இயக்கம் போராடி பல்வேறு நிலைகளில் ஆசிரியர்களின் தரத்தை உயர்த்திய போதிலும் கடந்த, 2002 முதல் ஆசிரியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள்.2003 ல் நிதித்துறை அரசாணை 259 நாள் 06/08/2003 இன் படி பங்கேற்பு ஓய்வூதியம் 01/04/2003 க்கு பின் பணி நியமனம் பெற்றவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டது.
01/04/2003 க்கு பின் பணி நியமனம் பெற்றவர்கள் தொகுப்பூதியத்திலேயே நியமிக்கப்பட்டனர்.சம்பளம் ரூ3000/- மட்டும். தொகுப்பூதிய காலத்தை முறையான நியமன காலமாக மாற்ற நீதிமன்றம் செல்ல மாட்டோம் என்ற கட்டாய ஒப்பந்தம் வேறு. இந்த நிலை, பள்ளிக்கல்வி அரசாணை 99 நாள்.27/06/2006 இன் படி ஒரே நாளில் மாற்றப்பட்டு அனைவருக்கும் உடனடி பணிவரன்முறை அதோடு இனி தொகுபூதியம் இல்லை என்று உத்திரவாதமும் வழங்கப்பட்டது. ஆனாலும் , பின்னடைவு.எப்போது?,எப்படி?.ஆறாவது ஊதியக்குழு வந்த போதே பின்னடைவும் வந்துவிட்டது. இதுவரை எந்த ஊதியக்குழுவிலும் ஏற்படாத , முரண்பாடுகளின் மொத்த உருவமாக ஆறாவது ஊதியக்குழு வெளியானது.
(தொடரும்) குன்வர்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.