மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி காலியிட விபரங்களை, இணைய தளத்தில் வெளியிடவேண்டும் என, மாணவர் மற்றும் பெற்றோர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து நலச்சங்கத் தலைவர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரியில் கடந்த மாதம் 78 மருத்துவ இடங்களுக்கு 2ம் கட்ட சென்டாக் கவுன்சிலிங் நடந்தது. அதன் பிறகும் இடங்கள் காலி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த காலியிடங்கள் மாணவர்களும், பெற்றோர்களும் அறிந்து கொள்ளும் வகையில் இதுவரை சென்டாக் இணையதளத்தில் வெளி யிடப்படவில்லை.
அரசு கல்லூரியில் வெளிமாநில இட ஒதுக்கீடாக ஒதுக்கப்பட்ட 23 இடங்களில், 6 இடம் காலியாக உள்ளவை ஆகும். இது சம்பந்தமாக வழக்கு சுப்ரிம் கோர்ட்டில் உள்ளது. இவ்வழக்கு வரும் 10ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்த விசாரணையின்போது 6 இடங்களை நிரப்பிக்கொள்ள புதுச்சேரி அரசுக்கு அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது. மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை வரும் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
எனவே, மருத்துவம், துணை மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர துணை கலந்தாய்வை விரைவில் நடத்த வேண்டும். இதற்கான அனுமதியை புதுச்சேரி பல்கலைக்கழகத்திடம் இருந்து காலத்தோடு பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியிடங்களை சென்டாக் இணைய தளத்தில் வெளியிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.