"வாழ்கை பாதையில் வெற்றி என்ற இலக்கை அடைய, ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை மனதைரியம் மிகவும் அவசியம்" என முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.
கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள, அம்ரித் சிறப்பு பள்ளியின் பொன் விழா கொண்டாட்டங்கள் நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கற்றல் திறன் குறைபாட்டு பிரிவை துவக்கி வைத்து பேசியதாவது:
ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை, மனதைரியம் மிகவும் அவசியம். கடந்த 2003ம் ஆண்டு நான் ஜனாதிபதியாக இருந்த போது 1000 மாற்றுத்திறனாளிகளை ஒன்றாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, என் மனதில் உதித்த கவிதை "நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள், எங்கள் மனம் வைரத்தை போன்று வளமானது, எங்கள் தன்னம்பிக்கையால் எப்போதும் வெற்றி பெறுவோம், கடவுள் எங்களுடன் இருக்கையில் எதிரிகள் யாரும் இல்லை".
தன்னம்பிக்கை, மனதைரியத்தை வளர்த்திக் கொள்ளுங்கள். மண்ணில் பிறந்த ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தன்னம்பிக்கை ஊட்டி வளர்க்கவேண்டியது நம் கடமை. இவ்வாறு கலாம் பேசினார்.
முன்னதாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் நமது பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் மீனவர்கள் போன்றும், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கிராம வாழ்கை, தப்பாட்டம், கோலாட்டம் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதை பார்த்த கலாம் கண்கலங்கினார். மேடைக்கு சென்று மாணவர்களை பாராட்டி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.