அரசு தொழிற்பயிற்சி பள்ளி களில், ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்களின் தொழிற்பயிற்சி திறன் கேள்வி குறியாகி உள்ளது.
தமிழகத்தில், 62 தொழிற்பயிற்சி பள்ளிகளை அரசு அமைத்துள்ளது. இவை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கட்டுப்பாட்டில், இயங்கி வருகின்றன. இதில், பிட்டர், வெல்டர், பொருத்துனர், மோட்டார் மெக்கானிக், டெய்லரிங் பயிற்சி, "ஏசி" மெக் கானிக் உள்ளிட்ட தொழிற் பாடப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், செங்கல்பட்டு பகுதியில் அரசு தொழிற்பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், ஆண்டு தோறும் வகுப்பிற்கு, 50 மாணவர்கள் என, மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும், ஆண்டுதோறும் 31 ஆயிரம் பேர் தொழிற்பயிற்சி பெறுகின்றனர்.
5 புதிய பள்ளிகள் ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும், ஒரு ஆசிரியர் என, ஒவ்வொரு மையத்திலும், 10க்கும் மேற்பட்ட, ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் 4 பணியிடங்களில் மட்டுமே, ஆசிரியர்கள் உள்ளனர். தமிழகம் முழுவதும், அரசு தொழிற்பயிற்சி பள்ளிகளில், 469 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக 5 தொழிற்பயிற்சி பள்ளிகள் தொடங்க, நிதி ஒதுக்கி, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறைக்கு, முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.
புதிய தொழிற்பயிற்சி பள்ளிகளில் உருவாகும் பணியிடங் களையும் சேர்த்தால், தமிழகத்தில் மொத்தம் 569 தொழிற்பயிற்சி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும். வகுப்பு நடத்த ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதால், மாணவர்களின் கல்வி திறன் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு தொழிற் பயிற்சி பள்ளி முதல்வர் ஒருவர் கூறுகையில், "அரசு தொழிற்பயிற்சி பள்ளிகளில், காலியாக உள்ள இளநிலை பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கு, கடந்த 2000ல், அரசு வேலை வாய்ப்பகம் மூலம், ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அதன்பின், கடந்த, 13 ஆண்டுகளாக ஆசிரியர் பணிகளுக்கு ஆள்தேர்வு நடைபெறாததால், பற்றாக்குறை ஏற்பட்டு, மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காலி பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
காலிப் பணியிடங்கள்
இதுகுறித்து, அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அதிகாரிகள் கூறுகையில் "அரசு தொழிற்பயிற்சி பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு செய்வது குறித்து அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.