கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 8 ம் தேதி நடைபெறும் தலைமையாசிரியர்கள் சங்கத்தினர் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் அதிக அளவில் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வில் உள்ள முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்டுள்ள சீராய்வுக் குழுவின் அறிக்கையை விரைந்து பெற்று, அதன்பிறகே, மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் 8ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
No comments:
Post a Comment