காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலை நிலைக் கல்வி இயக்ககத்தின் வாயிலாக நடத்தப்படும், 2011, 2012 மற்றும் 2013ம் ஆண்டுக்கான வகுப்புகள் நடக்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை அறிவியல் (தகவல் தொழில்நுட்பவியல்), இரண்டாம் ஆண்டுக்கு செப்.4 முதல் 13 வரையும் முதுநிலை கணினி பயன்பாட்டியல் மற்றும் முதுநிலை பட்டய படிப்பு (கணினி பயன்பாட்டியல்) இரண்டாம் பருவநிலைக்கு செப்.5, 6 தேதிகளிலும், முதுநிலை கணினி பயன்பாட்டியல், நான்கு மற்றும் ஆறாம் பருவநிலைக்கு செப்.10, 11ம் தேதியும், பல்கலை கழக கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் வகுப்புகள் நடக்கிறது.
இளநிலை, முதுநிலை அறிவியல் (கணிதவியல்) மாணவர்களுக்கான தொடர் வகுப்புகள், கணிதவியல் துறையில் செப்.7, 8, 14, 15, 21, 22 ஆகிய தேதிகளில் நடக்கிறது. பி.பி.ஏ., (பேங்கிங்), எம்.பி.ஏ., (பி அன்ப் எப்) படிக்கும் மாணவர்களுக்கு வங்கி மேலாண்மை வளாகத்தில் செப்.16 முதல் 21 வரை நடக்கிறது என தொலை நிலை கல்வி இயக்குனர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment