புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வதோடு, 2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைத்து ஊழியர் களுக்கும் ஓய்வூதியம் வழங் குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் 12-வது மாநாடு பொன்னமராவதியில் நடை பெற்றது. இதில் இக்கோரிக் கையை வலியுறுத்தி தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.போக்குவரத்துத் தொழி லாளர்களுக்கான 12-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சு வார்த்தையை உடனே தொடங்க வேண்டும்; அனைத்துத் தொழிலாளர் களுக்கும் பாரபட்சமின்றி 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்; 240 நாள் பணி முடித்த தொழிலாளர் களை எவ்விதக் காரணமும் காட்டாமல் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
சங்கத் தலைவர் எஸ். பாலசுப்பிரமணியன் தலை மையில் நடைபெற்ற இம்மாநாட்டில், சிஐடியு மாவட்டத் தலைவர் ப.சண் முகம் கொடியேற்றி வைத் தார். மாநாட்டை தொடங்கி வைத்து சிஐடியு மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ் பேசினார். பொதுச்செயலா ளர் கே.முகமதலிஜின்னா, பொருளாளர் பி.லோகநா தன் ஆகியோர் அறிக்கை வைத்தனர்.மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் எம்.சின்னத் துரை மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள்; எம். ஜியாவுதீன், எல்.சிவக் குமார், சி.அடைக்கலசாமி, சி.மாரிக்கண்ணு, எம்.கவி ராஜன், எஸ்.நல்லதம்பி ஆகி யோர் வாழ்த்துரை வழங் கினர்.
அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் மாநிலப் பொதுச்செயலா ளர் கே.ஆறுமுகநயினார் சிறப்புரையாற்றினார். சங்கத் தலைவராக கே. முகமதலிஜின்னா, பொதுச் செயலாளராக ச.பாலசுப் பிரமணியன், பொருளாள ராக கே.கார்த்திக்கேயன், துணைப் பொதுச்செயலா ளராக எஸ்.மோகன், துணைத் தலைவர்களாக சின்னச்சாமி, சிவஞானம், ஆறுமுகம், செல்வராஜ், துணைச் செயலாளராக குணசேகரன், சந்தானம், மணிமாறன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்னதாக வி.சிவஞானம் வரவேற்க, கே.பெருமாள் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.