அமிர்தா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று காந்திபுரம் நகர பஸ் ஸ்டாண்டில் தூய்மைப்பணியில் இறங்கியதால், பஸ் ஸ்டாண்ட் "பளிச்"சென்று காணப்பட்டது.
அமிர்தானந்தமயி தேவியின் 60வது பிறந்த நாளையொட்டி, கோவையிலுள்ள அமிர்தா பல்கலை மாணவ, மாணவியர், "அமலபாரதம்" என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். ரத்ததானம், உடல் உறுப்பு தானம், கல்விஉதவித்தொகை வழங்குதல், கிராமம் தத்தெடுப்பு, சுற்றுப்புற சூழலையும் இயற்கையையும் பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, நேற்று கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொண்டனர். அமிர்தா பல்கலையில் தொழில் நுட்ப கல்வி மற்றும் இன்ஜினியரிங் பிரிவில் படிக்கும் மாணவ மாணவியர் இணைந்து, பஸ் ஸ்டாண்டை தூய்மைப்படுத்தும் பணியில் இறங்கினர்.
மேயர் வேலுச்சாமி துவக்கி வைத்தார். நகர பஸ் ஸ்டாண்டிலுள்ள மூன்று பிளாட்பாரங்களை மாணவ மாணவியர், "சோப் ஆயில்" கொண்டு சுத்தமாக கழுவினர்; சுவர்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அப்புறப்படுத்தினர். பஸ் ஸ்டாண்டின் உள் பகுதியிலுள்ள ஒட்டடை மற்றும் தூசுகளை துடைப்பான்களை கொண்டு அப்புறப்படுத்தினர்.
இரண்டு பிளாட்பாரங்களுக்கு இடையே உள்ள பூங்காவிலிருந்து மதுபான பாட்டில்கள், பான்மசாலா, குட்கா, காண்டம் பாக்கெட்டுகளை அப்புறப்படுத்தி, செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சினர். நேற்று காலை துவங்கிய பஸ் ஸ்டாண்ட் தூய்மைப்படுத்தும் பணி, நேற்று மாலை வரை தொடர்ந்தது.
மாணவர்களுடன் அலுவலக பணியாளர்கள், பேராசிரியர்களும் தூய்மைப்பணியில் பங்கேற்றனர். ரூட்ஸ் நிறுவனமும் இப்பணியில் ஈடுபட்டது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.