"இன்டர்நெட்டில் ஆபாச படம் பார்க்கும் இளைய தலைமுறையினர் 25 லட்சம் பேர் என, ஆய்வுகள் கூறுகின்றது," என ஓய்வு பெற்ற காவல் துறை எஸ்.பி. கலியமூர்த்தி பேசினார்.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி, சர்.சி.வி., ராமன் மகளிர் விடுதி முதலாமாண்டு மாணவிகள் வரவேற்பு விழா, மூக்கப்பிள்ளை கலையரங்கத்தில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.பி., கலியமூர்த்தி பேசியதாவது:
அமெரிக்காவில் நடந்த கம்ப்யூட்டர் கருத்தரங்கில் பேசி, அதிபர் ஒபாமா இந்திய மாணவர்களை விட, அமெரிக்க மாணவர்கள் கல்வியில் பின்தங்கியிருப்பதற்கு என்ன காரணம்? என கேட்டார். அதற்கு அங்கிருந்த ஆசிரியர் ஒருவர், இந்தியாவில் ஒழுக்கத்துடன் கூடிய கல்வி கற்றுத்தரப்படுகிறது. அமெரிக்காவில் கல்வி மட்டுமே கற்றுத்தரப்படுகிறது எனக்கூறினார்.
அப்பெருமை வாய்ந்த இந்தியாவில், ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் டி.வி.,யும், மடியில் லேப்டாப்பும், கையில் மொபைல் ஃபோனும் வந்ததால், பருவம் அடையும் முன்னே, எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடிகிறது. படிக்கும் முன்பே அறிவு வந்துவிடுகிறது.
இதனால் நமக்கு எல்லாம் தெரியும் என, பெற்றோரையும், ஆசிரியரையும் உதாசீனப்படுத்துகிறோம். இதனால் சரியான வளர்ச்சி பாதையில் தான், நாடு சென்று கொண்டிருக்கிறதா? என சந்தேகம் வருகிறது. ஏனென்றால், இன்றைய இளைய தலைமுறையினரில் 25 லட்சம் பேர் இன்டர்நெட்டில் ஆபாச படம் பார்க்கின்றனர் என ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. இது போலீஸூக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் குற்ற சம்பங்களும் அதிகரித்துள்ளது.
நாட்டில் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு ஒரு சதவீதம் பேருக்கு கிடைக்கிறது. கல்வியின் முக்கியத்துவத்தை சங்ககால புலவர்கள் முதல், நவீன கவிஞர்கள் வரை வலியுறுத்தி உள்ளனர். பெண்கள் கல்வி கற்றால் வீடு மட்டுமின்றி, சமூகமும் முன்னேறும் என பாரதிதாசன் கூறியுள்ளார்.
இக்கல்லூரியில் உங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி, ஒவ்வொருவரும் முன்னேற்றம் அடைய வேண்டும். ஒவ்வொருவரும் தன் குடும்ப வளர்ச்சியை மட்டும் எண்ணாமல், சமூக வளர்ச்சிக்கு தனது பங்களிப்பை தரவேண்டும். ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே நாட்டின் வளர்ச்சிக்கு பயன்தரும். இதை உறுதி செய்வதில் மாணவிகளின் பங்கு அவசியம்." இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.