Pages

Sunday, September 8, 2013

ABL- கல்விமுறை முடங்கியதால் கல்வியாளர்கள் அதிர்ச்சி

துவக்கப் பள்ளிகளில்ஐந்தாம் வகுப்பு வரைஅறிமுகம் செய்யபடுத்தப்பட்டஏ.பி.எல்.கல்வி முறை,(செயல்வழி கற்றல்) எந்த பள்ளியிலும் பின்பற்றப்படாததால்ஏ.பி.எல்.அட்டைகள்

காட்சிப்பொருளாகி விட்டன. பல கோடி ரூபாய் செலவு செய்து,நடைமுறைப்படுத்தப்பட்டஇக்கல்வி முறை பயனற்று போனது,கல்வியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

புதிய கல்வி முறை: தமிழகத்தில், 2006ம் ஆண்டுக்கு முன் வரை,துவக்கப்பள்ளிகளில் புத்தக கல்வி முறை இருந்து வந்தது. மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டுஅதில் உள்ள பாடங்களை ஆசிரியர் நடத்துவது வழக்கம். ஒரு வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும்ஒரே வித புரிந்து கொள்ளும் தன்மையில் இருக்க வாய்ப்பில்லை என்பதால்கல்வி ஒரு சிலருக்கு இனிப்பாகவும்,ஒரு சிலருக்கு கசப்பாகவும் இருப்பதாக கருதிஅப்போதைய சென்னை மாநகராட்சி கமிஷனராக இருந்த விஜயகுமார்ஏ.பி.எல்.,எனும் கல்வி முறையைஒரு சில பள்ளிகளுக்கு அறிமுகப்படுத்தினார்.

இதில் பாடங்கள் அனைத்தும்வண்ண அட்டைகளாக மாற்றப்பட்டு,வகுப்பறையில், "ட்ரே"யில் அடுக்கப்படும். இதில் மாணவர்கள் படிநிலைக்கு ஏற்பகுழுக்களாக பிரிக்கப்பட்டுஅவர்கள் படிநிலைக்கேற்ப பாடங்களை அவர்களே படித்துக்கொள்ளும் முறை அமைக்கப்பட்டது. இதில் மாணவர்கள் தாங்களாகவே,கற்றுக்கொள்ளும் படி இருந்ததால்மாணவர்களிடையே நல்ல வித்தியாசம் தெரிந்தது. இதை ஆய்வு செய்த அரசுகடந்த, 2006 - 07ம் கல்வியாண்டில்அனைத்து துவக்கப் பள்ளிகளுக்கும்,இம்முறையை அறிமுகம் செய்தது.

ஐ.ஏ.எஸ்.அதிகாரியான விஜயகுமாரைஅனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனராக நியமித்துஇத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அனைத்து பள்ளிகளுக்கும் ட்ரேஏ.பி.எல்.அட்டைகள்,ஆசிரியர்களுக்கு பயிற்சி எனஇதற்காகபல கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டது. ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே கற்றலுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதால்ஆசிரியருக்கு வேலைப்பளு அதிகரிப்பதாக எதிர்ப்பு தெரிவித்ததால்,அவர்களுக்கான, "லெசன் பிளான்" எழுதுவது உள்ளிட்ட பணிகள் செய்ய தேவையில்லை எனஅறிவிக்கப்பட்டது.

ஆனால்இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய விஜயகுமார்இத்திட்ட பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்ஏ.பி.எல்.கல்வி முறையில்,அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்அலட்சியம் காட்டினர். அதிலும்குறிப்பாக கடந்த ஆண்டுமுப்பருவக்கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகம் செய்த பின்ஏ.பி.எல்.,கல்விமுறைமுற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கோடி ரூபாய் வரைசெலவழித்து வாங்கப்பட்ட கல்வி உபகரணங்கள் உள்ளிட்டவை பயனற்று கிடக்கின்றன.

இதுகுறித்துஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: புத்தகத்தில் உள்ள பாடங்களை வண்ண அட்டைகளாக மாற்றி,வகுப்பறையில் வைத்த பின்பும்அதே புத்தகத்தை மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்த குளறுபடி ஆண்டுக்காண்டு அதிகரித்துதற்போது அனைத்து பள்ளிகளிலும்,புத்தக கல்வி முறை மட்டுமே பின்பற்றப்படுகிறது. இதற்கேற்றாற்போல்ஏ.பி.எல்.அட்டைகளும் புதிதாக வழங்கப்படுவதில்லை. இதனால் பழைய அட்டைகள் முதலான உபகரணங்கள் காட்சிப்பொருளாகிவிட்டன.

ஏ.பி.எல்.கல்வி முறைக்காககுறைக்கப்பட்ட பணிகளைதற்போது ஆசிரியர்கள் செய்வதில்லை. இதனால் புத்தக கல்வி முறையிலும் தரம் குறைந்துவிட்டது. இதனாலேயே அரசு துவக்கப் பள்ளிகளில்,மாணவர் சேர்க்கை ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருகிறது. முதலில் எந்த கல்வி முறையை பின்பற்ற வேண்டும் என்ற தெளிவான முடிவை கல்வித்துறை அலுவலர்கள் எடுக்க வேண்டும். இவ்வாறுஅவர்கள் கூறினர்.

இச்செய்தி குறித்து எனது

விளக்கம்: செயல்வழிக் கற்றல் முறையை ஆய்வு செய்து கல்வித்துறை Grade வழங்கி வருகின்றது. தமிழ்நாட்டில் செயல்வழிக்கற்றல் நடைமுறையில் தான் உள்ளது. ஏ.பி.எல் அட்டைகளில் தான் குளறுபடிகள் இருந்தது. அதற்கும் கூட திருத்தங்கள் செய்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. சி.சி.இ ஏ.பி.எல் ஏ.எல்.எம் என பல்வேறு முறைகளால் ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. பதிவேடு பராமரித்தலுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைத்து ஏதேனும் ஒரு கற்றல் முறையை நடைமுறைப்படுத்தலாம்.
இது தினமலர் நாளிதழ் செய்தி.

1 comment:

  1. Thaniyar pallikalum ABL-i pinpatra adhikarikal nirpandhippadhilai ean?

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.