கோவை: "பள்ளிக் கல்வியின் முக்கியத்துவம் கருதி, தமிழக அரசு 14,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது," என, தமிழக பள்ளி மற்றும்
உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேசினார்.
பீளமேடு, பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி பொன்விழா நிறைவு நாள் நிகழ்ச்சி, நேற்று மாலை நடந்தது. தமிழக பள்ளி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேசியதாவது:
"கல்வி கற்போரின் எண்ணிக்கை அதிகரித்தால், பல்துறைகளும் நல்ல வளர்ச்சி பெறும் என்பதால், தமிழக அரசு கல்வித்துறைக்கு அதிக முக்கியத்தும் கொடுத்து செயல்படுகிறது.
மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில், புதிதாக 51 அரசு கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன. பத்தாண்டுகளுக்கு பின் பல்துறைகளிலும் எத்தகைய வளர்ச்சி அவசியம் என்பதை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் "விஷன் 2023" திட்டத்தை வகுத்துள்ளார்.
உயர்கல்வி கற்போர் விகிதம் அகில இந்திய அளவில், 15 சதவீதம்,சர்வதேச அளவில் 23 சதவீதம், வளர்ந்த நாடுகளில் 54 சதவீதம்,தமிழகத்தில் 19 சதவீதமாக உள்ளது. பள்ளிக்கல்வியின் முக்கியத்துவம் கருதி தமிழக அரசு 14,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது." இவ்வாறு, அவர் பேசினார்.
தமிழக வேளாண்துறை அமைச்சர் தாமோதரன் பேசுகையில், "இன்றைய இளைஞர்களின் அறிவுப்பசியை பூர்த்தி செய்யும் வகையில், ஆசிரியர்கள் தங்களின் திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டியது அவசியம்," என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.