முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதியில், அரசு சார்பில் நடந்த தனியார் துறைகளின், மெகா வேலைவாய்ப்பு முகாமில்,பங்கேற்ற, 23 ஆயிரத்து 904 பேரில், 5,054 பேர் தேர்வுசெய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதியில், தனியார் துறைகளை கொண்டு வேலைவாய்ப்பு முகாம் நடத்துமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டார். அதன்படி, தொழிலாளர் நலத்துறை மற்றும் தொழில்துறைசார்பில், தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாமை நடத்தின.இதுகுறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனர் பிரகாஷ் கூறியதவது: வேலைவாய்ப்பு முகாம், எவ்வித கட்டணமுமின்றி நடத்தப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து, 23 ஆயிரத்து, 904 பேர் பங்கேற்றனர். இதில், இன்று (நேற்று) மட்டும், 5,054 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், 1,500 பேர் தேர்வு செய்ய பரிசீலனையில் உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.முகாமில் பங்கேற்ற வெளிமாவட்ட இளைஞர்கள், "வெளி மாவட்டத்திலிருந்து இங்கு வருவதால், தேவையில்லாத அலைச்சல் ஏற்படுகிறது. பேருந்தில் இடம் கிடைக்கவில்லை. இது போன்ற பயனுள்ளவேலைவாய்ப்பு முகாம்களை, அந்தந்த மாவட்டத்தில் நடத்தினால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment