Pages

Saturday, August 10, 2013

நல்லவற்றை நினைத்தால் வாழ்வு சிறக்கும்

"நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்" என்பது விவேகானந்தரின் வாக்கு.

வாழ்வில் கற்பனைத்திறனுடன் தான் பெருமளவு கழிக்க வேண்டியுள்ளது. அதில் நல்லவற்றை நினைத்தால் வாழ்வு சிறக்கும். தீய கற்பனைகளை சிந்தித்தால், அது நிஜ வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும்.

நம்முடைய இயலாமையை முற்றிலுமாக ஒழித்தால் மட்டுமே, முழுமையான கற்பனைத் திறனை பெற முடியும். பல்வேறு காரணிகள், கற்பனைத் திறனுக்கு ஊறு விளைவிக்கின்றன. கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவத்தின் மீதுள்ள பயம் மற்றும் விருப்பம், குறைவான மனப்பக்குவம், விழிப்புணர்வு இல்லாத நிலை, மற்றவர்களின் தூண்டுதல், குறிக்கோள் நிர்ணயிக்காதது போன்றவை தான் கற்பனைத் திறனை பாதிக்கின்றன.

கற்பனைத் திறனை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தால், பிரச்னை அளிக்காமல் பார்த்துக் கொள்ளலாம். கற்பனை செய்வதும், அதற்கு உருவகம் கொடுப்பதும் எளிதானது. கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களில் உங்களுக்கு பிடித்தமானவற்றை அல்லது மகிழ்வித்த விஷயங்களை எண்ணுங்கள். அந்த நேரங்களில் இருந்த இடம், நபர்கள், எண்ணங்கள், உணர்வுகள், அந்த சூழலில் உள்ள சத்தங்கள் போன்றவற்றை மனதில் கொண்டு வர முயலுங்கள்.

இவை கற்பனைக்கு ஒரு உருவகம் கொடுக்க உதவியாக இருக்கும். முயற்சியின் மீது நம்பிக்கை வையுங்கள். சரியான நேரத்தில் மேற்கொள்ளும் முயற்சிகள் உரிய பலன் அளிக்கும். நல்ல கனவுகளை மனதில் கொண்டு செயல்பட்டால், அது உங்கள் வசம் வந்தே தீரும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.