பள்ளிகளில் இடைநின்றலை தவிர்க்க, அரசு அறிவித்துள்ள கல்வி ஊக்கத்தொகை முதற்கட்டமாக, 10 மாவட்ட மாணவர்களுக்கு, வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
அரசு, உதவி பெறும் பள்ளிகளில், சில மாணவர்கள், பொருளாதார வசதியின்றி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். இது போன்று, மாணவர்கள் இடைநின்றலை தவிர்க்க, "பிளஸ் 2 முடித்த மாணவருக்கு, 2,194 ரூபாய் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்" என, அரசு அறிவித்தது.
இதற்காக, மாவட்ட வாரியாக மாணவர்கள் பட்டியல், வங்கிக் கணக்கு விபரங்கள் சேகரிக்கப்பட்டன. வங்கி கணக்குக விபரங்களை முழுமையாக வழங்கிய, 10 மாவட்டங்களை தேர்வு செய்து, அந்தந்த மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, வங்கி கணக்கில் ஊக்கத்தொகையை வரவு வைக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.