"சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில், 2005-06ம் ஆண்டு முன் பட்டப்படிப்பில் சேர்ந்து, இதுவரை பட்டப்படிப்பை முடிக்காதவர்கள், புதிய பாடத் திட்டத்தில் தேர்வு எழுதுமாறு, அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து, சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை பல்கலைக்கழகத்தின், தொலைதூர கல்வி நிறுவனத்தில், 2005 - 06ம் ஆண்டுக்கு முன், இளங்கலை மற்றும் முதுகலை பட்ட வகுப்பில் சேர்ந்து, இதுவரை தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வுகளை, தற்போது எழுதும் போது, 2005 -06ம் ஆண்டு பின், மாற்றம் செய்யப்பட்ட பாடத் திட்டத்தில் தான், தேர்வு எழுத வேண்டும்.
புதிய பாடத் திட்டத்தில் தேர்வு எழுதினால் மட்டுமே, அவர்களது தேர்வு செல்லும். பழைய பாடத் திட்டத்தில் தேர்வு எழுதினால், அதற்கு சென்னை பல்கலைக்கழகம் பொறுப்பாகாது. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.