தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் சந்திரன் தலைமையில் நடந்தது. செயலாளர் உக்கிரபாண்டி வரவேற்றார். பிரசார செயலாளர் சுரேஷ், துணை தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர்.
தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலை பள்ளிகளுக்கான கலந்தாய்வு முறைகேடுகள் கண்டிக்கத்தக்கது; சம்பள உயர்வு தொடர்பான 3 நபர் குழு அறிக்கை, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது; ஆசிரியர்களின் பத்து மற்றும் பிளஸ் 2 சான்றிதழ்களின் "உண்மைத் தன்மை" வழங்கும் அதிகாரத்தை, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழங்க வேண்டும்.
பணிநீக்கம் செய்யப்பட்ட 652 கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்; ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் பழனிவேல்ராஜன் நன்றி கூறினார்.
1 comment:
Try to organise one rally as like sg teachers for pay problems just conducting collecting money showing mass mass nothing simply eating bondas and tea making politics wth new appntd trs and in ceo offce only
Post a Comment