Pages

Wednesday, August 21, 2013

கல்வித் துறையில் வளர்ந்த நாடு இந்தியா: பல்கலை., துணை வேந்தர் பெருமிதம்

கல்வித் துறையில் வளர்ந்த நாடு என்று நம் நாட்டை அழைக்கலாம் என்று கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பேசினார்.

ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜேம்ஸ் பிச்சை, பட்டங்களை வழங்கி பேசியதாவது:

ஆண்கள் கல்வி பெற்றால், அவருக்கு மட்டுமே பயன் கிடைக்கிறது. பெண்கள் கல்வி பயின்றால், சமுதாயத்துக்கே பயன் ஏற்படுகிறது. துவக்க காலத்தில் மெட்ரோ பாலிடன் சிட்டியிலும், பணக்கார குடும்பங்களில் மட்டுமே பெண்கள் கல்வி பயின்றனர்.

கடந்த, 1985ம் ஆண்டு யு.ஜி.சி., ஏற்படுத்தப்பட்ட பிறகு தான், தற்போது, 700க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் நாட்டில் செயல்படுகின்றன. தமிழகத்தில், 59 பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. பிற துறைகளில் வளர்ந்து வருகிறது என்றாலும், கல்வியை பொறுத்தவரை, நம் நாட்டை வளர்ந்த நாடு என்று கூறலாம். ஜாதி, மதம், இனம் ஏதுமின்றி, கல்வி அனைவருக்கும் பொதுவானது. உயர் கல்வி துறையில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்திலும், இந்தியாவில் தமிழகம் முதலிடமும் வகிக்கிறது.

நாட்டில் விடுதலைக்கு முன், 41 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தன. மாணவர்களை அறிவாற்றால், கல்வி தகுதி மிக்கவர்களாக ஆசிரியர்கள் மாற்றுகின்றனர். கல்வியே அழியாத செல்வமாக விளங்குகிறது. அதுவே ஒருவருக்கு மதிப்பு, மரியாதையை தேடித் தருகிறது.

மாணவர்கள் ஆராய்ச்சித் துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் முன்னேற்றத்துக்காக கல்வி அறிவை பயன்படுத்த வேண்டும். மேலும், மேலும் தங்கள் அறிவாற்றலை வளர்த்து கொள்ள வேண்டும். புதிய, புதிய விஷயங்களை நாடி சென்று பயில கற்று கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.